ஸ்வப்னாவால் தூங்க முடியவில்லை. என்னை மட்டும் தண்ணீர் குடிக்கக் கூடாது என்று சொன்ன மிஸ், தான் மட்டும் வகுப்பிலேயே அடிக்கடி தண்ணீர் குடிக்கலாமா? இந்தக் கேள்வி அவளைக் குடைந்து எடுத்தது.
அது ஒரு சிறிய வகுப்பறை. அதில் ஐம்பது மாணவர்கள் படித்தார்கள். அடித்த வெயிலில் ஒரு குழந்தைக்கு தாகம் எடுத்தால் ஐம்பது பேருக்குமே தாகம் வந்தது. மிஸ்ஸால் சமாளிக்க முடியவில்லை. எனவே யாரும் தண்ணீர் குடிக்கக் கூடாது என்று கூறிவிட்டாள்.
"பிள்ளைகள் ஆசிரியருக்கு அடங்கி நடக்க வேண்டும். தண்ணீர் குடிக்கக் கூடாது என்று சொன்னால் குடிக்கக் கூடாது", என்று அலறினாள்.
சத்தம் சலனமின்றி அடங்கியபின், பொறுமையாக, தான் மட்டும் தண்ணீர் குடித்தாள்.
ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் குழந்தைகள் தண்ணீர் குடிக்காமல் தாகத்தில் தலிக்கும்போது தான் மட்டும் நீர் அருந்தலாம் என்று அவளுக்கு கற்றுத் தரவில்லை . பாடப்புத்தகத்தில் இருந்திருந்தால் பரிட்சையில் கேள்வி வரும் என்பதற்காகப் படித்திருபாள் . இப்படியான சில்லி விசயங்கள் syllabus -ல் இல்லாததினால் தன் வகுப்பில் முதல் மாணவியாகத் தேறினாள் என்பதை நான் சொல்ல மறந்துவிட்டேன் .
இப்படியாக தண்ணீர் குடிக்க அனுமதி மறுத்த strict ஆசிரியர் பத்மாவதிக்கு அதிகாரிகளிடம் மிகவும் நல்ல பெயர் என்பதை நான் சொல்லாமலே
No comments:
Post a Comment